பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக சமீபத்தில் நிதிஷ்குமார் பதவியேற்றார் என்பதும் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார் என்பதும் தெரிந்ததே.
இதனை அடுத்து பீகார் மாநிலத்தில் 31 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் 16 எம்எல்ஏக்களும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 3 எம்.எல்.ஏக்களும், ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் என மொத்தம் 30 எம்.எல்.ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பதவியேற்றவர்களில் முக்கியமானவர்கள் ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மதன் சாஹ்னி, ஷீலா குமாரி மண்டல், ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் லலித் குமார் யாதவ், சந்திரசேகர், அனிதா தேவி, சுதாகர் சிங், முகமது இஸ்ரைல் மன்சூரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. முராரி பிரசாத் கவுதம் ஆகியோர் ஆவார்கள்