ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் 80 பேர் மட்டுமே உள்ளனர்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (13:55 IST)
அதிமுகவில் உள்ள 80% பேர் ஓ பன்னீர்செல்வம் தரப்பினரிடம் இருப்பது பொய்யான தகவல் என்று அவரிடம் 80 பேர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
ஓபிஎஸ் முடிந்தால் ஆயிரம் பேரைக் கூட்டி போராட்டம் நடத்தி காட்டட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சசிகலா, தினகரன் ஆகியோர்களை எந்த நிலையிலும் அதிமுகவில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் கூறினார்
மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது என்றும் காவல்துறை தற்போது சுதந்திரமாக செயல்பட வில்லை என்றும் ஜெயகுமார் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வதால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என்றும் வேறு யாருக்காவது வேண்டுமானால் பயன் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்