மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: 800 மருத்துவர்கள் நியமனம் என அமைச்சர் அறிவிப்பு!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (07:46 IST)
பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக 800 மனநல மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க 800 மனநல மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
பள்ளி மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மனநல மருத்துவர்களின் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
லும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர் பதிலளித்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்