ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

Siva

ஞாயிறு, 8 ஜூன் 2025 (10:03 IST)
வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாக்கு எதிராக வாக்களிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதி உதவி செய்வதாகவும், அவ்வாறு செய்தால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் தற்போது திடீரென அவருக்கு எதிராக மாறியுள்ளார். அது மட்டுமின்றி, "தி அமெரிக்கா பார்ட்டி" என்ற பெயரில் புதிய கட்சியையும் அவர் தொடங்க உள்ளார்.
 
இந்த நிலையில், ட்ரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டியில், "எலான் மஸ்க் மிகவும்  அவமரியாதைக்கு உரியவர். அவர் செய்வது அனைத்தும் மோசமாக உள்ளது. வெள்ளை மாளிகையை அவர் அவமரியாதை செய்தார். நான் அவருடைய செயலால் ஏமாற்றம் அடைந்துள்ளேன். அவருக்கு நான் நிறைய உதவி செய்து உள்ளேன், ஆனால் அவர் அதிபர் பதவியை அவமரியாதை செய்தார். அதை பொறுத்துக் கொள்ள முடியாது," என்று தெரிவித்துள்ளார்.
 
வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் குடியரசு கட்சிக்கு எதிராக ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் போட்டியிட எலான் மஸ்க் நிதி உதவி செய்வதாக கேள்விப்பட்டேன். இவ்வாறு அவர் செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
 
"எனக்கும் அவருக்கும் உள்ள உறவை இனி சீர்படுத்தும் எண்ணம் இல்லை. நான் மிகவும் பிசியாக இருக்கிறேன். அவருடன் சமாதானம் செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை," என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்