இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார், மாநில அரசு அதிகாரிகள் அலுவலகங்களில் தொலைபேசி அழைப்புகளைப் வரும்போது ஹலோ என கூறுவதற்கு பதிலாக, வந்தே மாதரம் ' என்று சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் 76 வது ஆண்டில் நுழைகிறோம். நாட்டின் சுதந்திர அமுதவிழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறோம். எனவே, அதிகாரிகள் ஹலோ என்பதற்கு பதிலாக தொலைபேசியில் வந்தே மாதரம் என்று சொல்லிப் பழக வேண்டும் என்று கூறினார்.