திடீரென 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளம்.. குழிக்குள் விழுந்த கவுன்சிலர். பெரும் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (08:59 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில்  திடீரென சாலையில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த சாலையில் நின்று கொண்டிருந்த கவுன்சிலர் உள்பட ஒரு சிலர் குழிக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகம் உள்பட பல பகுதிகளில் திடீர் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனால் சில விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சகாரன்பூர் என்ற பகுதியில் சாலையில் கவுன்சிலர் உள்பட சிலர் நின்று கொண்டிருந்தபோது திடீரென அந்த சாலை 20 அடி ஆழத்திற்கு பள்ளமாக கீழே விழுந்தது.

இதில் கவுன்சிலர் உள்பட ஆறு பேர் பள்ளத்தில் விழுந்ததாகவும் அவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சாலை ஓராண்டுக்கு முன்பு தான் அமைக்கப்பட்ட நிலையில் அதற்குள் இந்த சாலையில் திடீரென இருபது ஆழத்துக்கு பள்ளம் மேற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாநில சாலை போக்குவரத்து நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாகவும் பள்ளம் ஏற்பட்டது எதனால் என்பது குறித்த காரணத்தை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்