செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தபோது 40 தொகுதிகளில் வெற்றி கொடுத்த மக்களுக்கு மின் கட்டண உயர்வு பரிசாக முதலமைச்சர் கொடுத்துள்ளார் என்றும் அதிமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்ததற்கு குடும்பத்துடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
மதுரையில் நடை பயிற்சி செல்வதற்கு பயமாக இருக்கிறது என்றும் எங்கள் கட்சி கவுன்சிலர்கள் எல்லாம் நடைபயிற்சி போகிறவர் என்றும் நீங்கள் எல்லாம் நடைபயிற்சி போகாதீர்கள் இடைத்தேர்தல் வந்துவிடும் என்றும் அப்புறம் திராவிடம் மாடல்படி நாங்கள் ஜெயிச்சுட்டோம் சொல்லிவிடுவார்கள் என்றும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.