குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

Mahendran

திங்கள், 17 ஜூன் 2024 (15:22 IST)
இன்ஸ்டாகிராம்  நண்பர் கொடுத்த குளிர்பானத்தை இளம் பெண் குடித்த நிலையில் அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்த நிலையில் அந்த இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒருவரிடம்  தனக்கு வேலை வாங்கி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தான் வங்கியில் வேலை பார்ப்பதால் வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறிய அந்த நபர் தன்னை நேரில் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். 
 
இந்த நிலையில் அவர் சொன்ன இடத்திற்கு இளம் பெண் சென்ற நிலையில் அவரை வரவேற்ற அந்த நண்பர் குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருப்பதை அறியாத அந்த இளம் பெண் குளிர்பானத்தை குடித்த நிலையில் மயக்கமாக அதன் பிறகு அந்த இன்ஸ்டா நண்பர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார். 
 
மயக்கம் தெளிந்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள இன்ஸ்டாகிராம் நண்பர் மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்