109 சதவீத வாக்குப்பதிவு.. எப்படி சாத்தியம்? தேர்தலை ரத்து செய்ய சிபிஎம் கட்சி கோரிக்கை..!

Siva
வியாழன், 25 ஏப்ரல் 2024 (08:21 IST)
100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 109 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருப்பதை அடுத்து தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் மூன்று சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்த போது அங்கு 105 சதவீதம், 109 சதவீதம் மற்றும் 98 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது 
 
வாக்கு சாவடிகளை முழுமையாக கைப்பற்றி முறைகேடு செய்தால் மட்டுமே 100 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிதாக மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சிபிஎம் கட்சியை தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளது 
 
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கூறிய போது நாங்கள் வாக்கு செலுத்திய சதவீதத்தை பார்க்கவில்லை தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் ஆய்வு செய்து முடிவு எடுக்கட்டும் தேர்தல் ஆணையம் எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் தான் என்று தெரிவித்துள்ளது 
 
அதிகபட்சமாக 100% மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற முடியும் என்ற நிலையில் 109 சதவீதம் எப்படி வாக்குப்பதிவு நடந்தது என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் கோரிக்கை எடுத்து வருகின்றனர். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்