முஸ்லீம்களுக்கு இந்துக்களின் சொத்தா? மோடிக்கு வலுக்கும் கண்டனம்.! RIP தேர்தல் ஆணையம்..! பி.டி.ஆர்..

Senthil Velan

திங்கள், 22 ஏப்ரல் 2024 (12:43 IST)
இந்துக்களின் சொத்துகளை  முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் கொடுத்து விடும் என பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையத்தை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை பகிர்ந்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நடைபெற்றது.

அடுத்த கட்ட தேர்தலை சந்திக்க தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.  பிரதமர் நரேந்திர மோடியும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ராஜஸ்தானில் நடந்த பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இந்தியாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
 
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள் என்றும் இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.  
 
நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பிய அவர்,  மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
 
பிரதமர் மோடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடியின் பேச்சு அப்பட்டமான மத வெறுப்பு பிரச்சாரம் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. 
 
மேலும் தேர்தல் நேரத்தில் மத ரீதியாகவோ இன ரீதியாகவோ சாதி ரீதியாகவோ பேசி வாக்குகள் சேகரிக்க கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இதனால் பிரதமர் மோடி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கிறது. 

ALSO READ: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு..! ED-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்