இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran

புதன், 9 ஏப்ரல் 2025 (14:27 IST)
இன்றும் நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நேற்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தோன்றிய நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் இது வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதியில் வலு குறைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல், இன்று முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை மற்ற மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்றும், மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆனால் அதே நேரத்தில் பகலில் 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்