பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீர் என சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் சரிந்து இருந்த நிலையில் சற்று முன் 110 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து 66 ஆயிரத்து 792 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தையால நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 20 ஆயிரத்து 81 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்று பங்குச்சந்தை சற்றே குறைந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.