2 நாட்களாக ஏற்ற இறக்கமின்றி வர்த்தகமாகும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் குழப்பம்..!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (11:28 IST)
பங்குச்சந்தை கடந்த பல ஆண்டுகளாக ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்திருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் பங்குச்சந்தை தொடங்கும் போது ஒன்று அதிக ஏற்றமாகவும் அல்லது அதிக இறக்கமாகவும் இருக்கும். 
 
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இன்றி உள்ளது முதலீட்டாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில் இன்றும் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வெறும் 20 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் அடைந்துள்ளது. அதேபோல்  தேசிய பங்குச்சந்தை நிப்டி 12 புள்ளிகள் மட்டுமே ஏற்றமடைந்துள்ளது. 
 
சென்செக்ஸ் 66035 என்ற புள்ளிகளிலும் நிஃப்டி 19810 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாக வருகிறது. இரண்டு நாட்களாக பங்குச்சந்தை பெரிய அளவில் வர்த்தகமும் இல்லாமல் பெரிய அளவில் ஏற்றம் இறக்கமும் இல்லாமல் இருப்பது முதலீட்டாளர்களை குழப்பத்தையே ஆழ்த்தியுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்