பங்குச்சந்தை சென்செக்ஸ், நிப்டி இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (10:14 IST)
இந்த ஆண்டின் முதல் வர்த்தக நாளான நேற்று பங்கு சந்தை உயர்ந்தது என்பதும் சுமார் 200 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 270 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 18229 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
பங்குச்சந்தை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றும் இந்த ஆண்டு பங்குச்சந்தை உச்சத்தை அடையும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சென்செக்ஸ் ஒரு லட்சமாக உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்