2வது நாளாக ஏற்றம்: மீண்டும் 61 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:32 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சுமார் 700 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 50 புள்ளிகள் அதிகமாக உள்ளது என்பதும் தற்போது 60 ஆயிரத்து 600 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 21 புள்ளிகள் அதிகரித்து 18035 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை நேற்றும் இன்றும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எப்போது வேண்டுமானாலும் சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்