சாத்தான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி?

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:55 IST)
கேழ்வரகு புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
 
கேழ்வரகு- 200 கிராம் 
சிவப்பு அரிசி- 100 கிராம் 
தேங்காய் துருவல்- ஒரு கிண்ணம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நறுக்கிய வாழைப்பழத்துண்டுகள் - சிறிதளவு
வெல்லம் - ஒரு கிண்ணம் 
நெய் - ஒரு தேக்கரண்டி
 
எவ்வாறு செய்யவேண்டும்:
 
கேழ்வரகு, சிவப்பு அரிசி இரண்டையும் சேர்த்து ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும். தண்ணீர் இளம்பதமாக சூடாக்கி மாவில் தெளித்து பிசறிக்கொள்ளவும். இட்லி தட்டின் மேல் ஒரு துணியை நனைத்து பிழிந்து போட்டு மாவை மூடி வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
 
நன்கு வெந்ததும், ஒரு தட்டில் கொட்டி உதிர்த்து, நெய், தேங்காய் துருவல், நறுக்கிய பழ துண்டுகள், வெள்ளம், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். இப்போது சுடச்சுட கேழ்வரகு புட்டு தயார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்