தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி வீட்டில் செய்து அசத்தலாம் வாங்க!

வெள்ளி, 18 நவம்பர் 2022 (10:45 IST)
பிரியாணி செய்யணி செய்ய தேவையான பொருட்கள்: 
 
சீரக சம்பா அரிசி - அரை கிளி 
மட்டன் - அரை கிலோ 
எண்ணெய் - 1/4 கப் 
நெய் - 3 டேபிள் ஸ்பூன் 
டால்டா - 3 டேபிள் ஸ்பூன் 
பெரிய வெங்காயம் -2 
தக்காளி- 2
பட்டை - சிறிது 
கிராம்பு-2 
ஏலக்காய்-2 
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசை டீஸ்பூன் 
தயிர்- 1 கப்
உப்பு - தேவைக்கேற்க
எலுமிச்சை பழம் - 1/2 மூடி 
மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் நன்கு வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும. தக்காளி வதங்கி கரைந்ததும் மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும் இதனுடன் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சை பழ சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். 
 
தண்ணீர் கொதிக்கும் போது ஊற வாய்த்த அரிசியை போடவும். அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். அரிசி வெந்ததும், நெய், டால்டா சேர்ந்து கிளறி இறக்கவும். இப்போது சுடச்சுட சுவையான தலைப்பக்கட்டு மட்டன் பிரியாணி ரெடி. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்