தமிழக ஆளுநர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி..! மல்லிகார்ஜுன கார்கே.....

Senthil Velan
திங்கள், 15 ஏப்ரல் 2024 (17:32 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவியை வைத்து நிர்வாகத்தை நடத்த விடாமல் முடக்கும் பணியை செய்து நெருக்கடியை மோடி தருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
 
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும் என்றார்.
 
பாஜக தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றி ஏதும் கூறவில்லை என்றும் இதன்மூலம் மோடி அரசானது புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்..
 
இந்தியா கூட்டணி வந்த பிறகு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம் என அவர் வாக்குறுதி அளித்தார். அமலாக்கத் துறை மூலம் தமிழக அமைச்சர் பொன்முடியை மோடி அரசு கைது செய்து துன்புறுத்தி ஜனநாயகப் படுகொலை செய்ததையும், விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொல்லை தந்ததைதையும் எதிர்த்தேன் என்றும் பாஜக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
புதுச்சேரியில் ஆளுநரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு எப்படி தொல்லை தந்தார்களோ, அதேபோல தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவியை வைத்து நிர்வாகத்தை நடத்த விடாமல் முடக்கும் பணியை செய்து நெருக்கடியை மோடி தருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடினார். 

ALSO READ: பறக்கும் படை சோதனை.! வரலாற்றில் இல்லாத அளவு பணம் பறிமுதல்..! எவ்வளவு தெரியுமா..?
 
தமிழக அரசுடைய மக்கள் நலத் திட்டங்களை கோப்புகள் அனுப்பினால், அதை ஆளுநர் ரவி முடக்கி தாமதப்படுத்தி ஜனநாயக படுகொலை செய்தார் என்று அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் முடக்குவதே மோடி அரசின் வேலை என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்