மீண்டும் தமிழகம் வரும் ராகுல் – தேசிய தலைவர்கள் கவனத்தை ஈர்த்த தேனி !

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (14:13 IST)
கடந்த மாதம் தமிழகம் வந்த ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் பிர்ச்சாரத்திற்காக தமிழகம் வர இருக்கிறார். இம்முறை தேனி தொகுதியில் கவனம் செலுத்த இருப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என பாஜகவும் இழந்த செல்வாக்க மீட்க காங்கிரஸும் போட்டி போட்டு வருகின்றனர். இதற்காக மோடி, ராகுல் காந்தி என இருக் கட்சி தலைவர்களும் தமிழகத்திற்கு சில முறை வந்து பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஏப்ரல் 12 ஆம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வர இருக்கின்றார். இதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உறுதி செய்துள்ளார்.

இந்த திடீர் முடிவுக்கு தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பலவீனமாக இருப்பதாலும் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய மோடி தேனிக்கு வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்