’ரெட்மி ’க்கு போட்டியாக ரூ.1500 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மாட்போன்கள்

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (14:08 IST)
சில வருடங்களுக்கு முன் சொல்போனில் உலக சந்தைகள் மட்டுமல்லாது மிகப்பெரிய இந்திய சந்தையை தன் வசியப்படுத்தியது நோக்கியா. இந்த நிறுவனம் என்ன மாடல் சொல்போனை அறிமுகம் செய்தாலும் அது மக்கள் மத்தியில் வெகு எளிதில் ரீச் ஆனது. 
ஆனால் அடுத்தடுத்து வந்த சக போட்டியாளார்களால் நோக்கியா சற்றுத் தடுமாறியது. இந்த நேரத்தில் மற்ற நிறுவனங்கள் இதன் இடத்தைப் பிடித்துக் கொண்டன.
 
தற்போது நோக்கிய மீண்டுன் விட்ட இடத்தைப் பிடிக்க கவனம் செலுத்தி வருகிறது.
 
இதில் எச்.எம்.டி. குளோபல் இந்தியாவின் நோக்கியா 1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
 
அதாவது,  நோக்கியா 1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 6.1 ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலையிலிருந்து ரு.1500 குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. 
 
இதில் முக்கிய அம்சமாக 6.1 ஜிபி ரேம் வெர்ஷன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெர்பிட் கார்டுகளை பயன்படுத்தும் போது 15 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
இச்சலுகை ஏப்ரல் 5 முதல் 20ஆம் தேதி வரை வழங்கப்படுகிறதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிக்ககுறைந்த  ஸ்மார்ட்போனாக ரு.3999 க்கு நோக்கியா 1 விற்பனையாகிறது.
 
மேலும் நோக்கியா 1 மாடல் ரெட்மி கோ சாம்சங் கேலக்ஸி ஜெ 2 கோர் உள்ளிட்ட மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
ரூ.1500 விலை குறைக்கப்பட்ட நோக்கியா 2.1 ஸ்மாட்போன் ரூ.5499 விலையிலும், இதேபோல நோக்கியா 6.1 பிளட் 6ஜிபி ரேம் வெர்சஷன் ரூ.16999 விலையிலும் விற்பனையாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்