மறுபடியும் தங்கபாலுவா ?; ராகுல் எடுத்த முடிவு – அலறும் காங்கிரஸ் தொண்டர்கள் !

வியாழன், 4 ஏப்ரல் 2019 (13:57 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இதையடுத்து கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் இன்று மனுத்தாக்கல்  செய்துள்ளார். நேற்று இரவு கேரளா வந்த அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் இருந்தார்.

இதையடுத்து வயநாடு தொகுதிக்கான காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் காங்கிரஸ் தமிழகத் தலைவரான கே வி தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கானக் காரணம் சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுலின் ஆங்கில் உரையை பொருத்தமற்ற முறையில் தங்கபாலு மொழிபெயர்த்ததே ஆகும். தங்கபாலுவின் தமிழ் மொழிபெயர்ப்பு சமூக வலைதளங்களில் கடுமையாக கேலி செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்