இதையடுத்து கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று இரவு கேரளா வந்த் அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் இருந்தார். கேரளாவில் மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.