CSK vs KKR: வெற்றியுடன் கேப்டன்சியை துவங்குவாரா ஜடேஜா?

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (08:18 IST)
2022 ஆம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் இன்று (மார்ச் 26) மும்பையில் தொடங்குகிறது. 

 
இந்த முறை 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் போட்டியில் அதிக தடவை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் ஏ மற்றும் பி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
 
இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏ பிரிவிலும், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
 
இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் களமிறங்குகிறது. 
 
இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி திக வெற்றிகளை பதிவு செய்துள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்