நாவல்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (18:30 IST)
நாவல் பழம் என்பது சீசனில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் நாவல்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்ப்போம். 
 
இதய நோய் வராமல் தடுப்பதில் நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் இனிப்பின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த பழத்தில் புரோட்டின் மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் ஆகியவை உள்ளன. 
 
மிக அதிகமான மருத்துவ குணங்கள் கொண்ட நாவல் பழத்தை சாப்பிடுவதால் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். அதேபோல் ஈறுகள் மற்றும் பற்கள் பிரச்சனை உள்ளவர்களும் நாவல் பழத்தை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். 
 
நாவல் பழத்தின் இலையை பொடி செய்து பற்களைத் துலக்கினால் பற்கள் மற்றும் ஈறுகள் பளிச்சென்று இருக்கும். கல்லீரல் பிரச்சனை, சிறுநீர் பிரச்சனை, வயிற்றுப்போக்கு பிரச்சனை ஆகியவையும் நாவல் பழம் சாப்பிட்டால் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்