இளநீர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

சனி, 10 ஜூன் 2023 (18:30 IST)
தற்காலத்தில் குளிர்பானங்கள் குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில் குளிர்பானத்திற்கு செலவழிக்கும் காசை இளநீரில் செலவளியுங்கள் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
கோடை சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கிய பங்கு ஆற்றுகிறது என்பதும் தாகத்தை தணிக்கும் இளநீர் எதிர்ப்பு சக்தியை அளிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை எண்ணற்ற நன்மைகளை மனிதர்களுக்கு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
குறைந்த கலோரி, குறைந்த சர்க்கரை கொண்ட பானம் என்பதால் இளநீரை சர்க்கரி நோயாளிகள் கூட குடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது இளநீரின் வழுக்கை என்பது புரதச்சத்து நிறைந்தது என்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. 
 
குறிப்பாக கர்ப்பிணிகள் நீர் இழப்பு, தலைவலி, கால் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்கும்போது இளநீரை குடித்தால் உடனே குணமாகும். வயிற்றுப்போக்கு அம்மை நோய் காலரா போன்றவர்களுக்கு இளநீர் ஒரு சிறந்த டானிக் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இளநீர் குடல் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்