படுத்து கொண்டே டிவி பார்ப்பதில் இவ்வளவு ஆபத்தா?

செவ்வாய், 13 ஜூன் 2023 (18:04 IST)
டிவி பார்ப்பது என்பது தற்போது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் படுக்கை அறையில் படுத்து கொண்டே டிவி பார்ப்பது ஆபத்தானது என்றும் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் படுக்கை அறையில் தூங்கி படுத்து கொண்டே டிவி பார்ப்பது உடல் பருமனை அதிகரிக்கும் என்றும் அதுமட்டுமின்றி நீல நிற ஒளி உடல்நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 
 
டிவியிலிருந்து வெளியாகும் ப்ளூரே என்ற நீல ஒளி விழித்திரையை சேதப்படுத்தும் என்றும் எலிகளைக் கொண்டு சோதனை செய்ததில் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இரவில் டிவி மட்டுமின்றி லேப்டாப், செல்போன் பயன்படுபவர்கள் குறைந்த வெளிச்சத்தில் பயன்படுத்தினால் புற்றுநோய் உள்பட பல்வேறு அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் அதிக நேரம் டிவி செல்போன் லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் என்றும் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல் மனச்சோர்வு உண்டாகி மன அழுத்தத்திற்கு இடம் வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்