ரூ.5,500 தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்(ஸ்): எம்.ஐ சூப்பர் சேல்!!

Webdunia
திங்கள், 27 மே 2019 (16:29 IST)
சியோமி நிறுவனம் எம்.ஐ சூப்பர் சேல் என்ற பெயரில் ரெட்மி ஸ்மார்ட்போன், டிவி, கேட்ஜெட் ஆகியவற்றிற்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. 
 
எம்.ஐ நிறுவனம் இன்று முதல் மே 31 ஆம் வரை இந்த தள்ளுபடி விற்பனை எம்.ஐ சூப்பர் சேல் என்ற பெயரில் வழங்கியுள்ளது. இந்த விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுக்களுக்கு ரூ.5,500 வரையில் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக ரெட்மி ஒய்3, ரெட்மி 7, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 6ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது நிச்சய தள்ளுபடி கிடைக்கும். எம்ஐ டிவி வாங்குபவர்களுக்கு ரூ.7,000 வரை தள்ளுபடி உண்டு. 
 
இது தவிர ஐசிஐசிஐ கிரேடிட் கார்டு பயன்படுத்தி ரெட்மி போன்கள் வாங்குபவர்களுக்கு 5% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். ஸ்மார்ட்போன், டிவி தவிர்த்து ரெட்மி ப்ளூடூத் ஹெட்போன் மேலும் ரெட்மியின் மற்ற கேட்ஜெட்ஸ் வாங்கவும் இது ஆஃபராக இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்