ஒரு ஆண்டில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை! – டாடாவுக்கு டாட்டா சொன்ன நானோ!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (17:38 IST)
இந்த ஆண்டில் இந்தியா முழுவதிலும் ஒரே ஒரு டாடா நானோ கார்தான் விற்பனையாகியுள்ளதாக டாடா நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவலை அளித்துள்ளது.

கார் என்றாலே ஆடம்பரமானது, விலை அதிகமானது என்ற நிலை இருந்தபோது சாமானியர்களும் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியதுதான் நானோ மாடல் கார்!

2008ம் ஆண்டு 1 லட்ச ரூபாய் விலையில் அறிமுகமான இந்த கார் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் நாளாக நாளாக மக்களுக்கு நானோ மீதான் ஈர்ப்பு குறைந்து கொண்டே போனது. என்னதான் குறைந்த விலை கார் என்றாலும் சோப்பு டப்பா போன்ற அந்த குட்டி காரின் லுக்கும், அதை உறவினர்கள் பார்க்கும் ஓரப் பார்வையும் பலருக்கு அதை வாங்குவதில் தயக்கத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

இதனால் தொடர்ச்சியாக விற்பனையில் சுனக்கத்தை கண்டு வந்த நானோ இந்த ஆண்டு வெறும் ஒரே ஒரு கார் மட்டும் விற்பனையாகியிருக்கிறது. ஆனாலும் இதன் உற்பத்தியை உடனடியாக நிறுத்த திட்டமில்லை என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்