கடன் வாங்க சரியான நேரம் இது! – ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு

வெள்ளி, 4 அக்டோபர் 2019 (17:09 IST)
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 5 வது முறையாக குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் பணத்திற்கான வட்டி விகிதம்தான் ரெப்போ விலை எனப்படுகிறது. தற்போது வங்கிகள் பல பண வீக்கத்தை சந்தித்திருப்பதால் இந்த ரெப்போ வட்டியை 0.25 ஆக குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த ஆண்டில் 5வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.15 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் விகிதத்தில் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கப்படும் கடன் அளவும் குறையும். இனி வங்கிகளில் வாங்கப்படும் கார் லோன், வீட்டு லோன் போன்றவற்றிற்கான வட்டி சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வங்கிகளில் கடன் வாங்க முயற்சித்து வரும் பயனாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்