6,622 ஊழியர்களை பணிநீக்கம் செய்த எஸ்பிஐ வங்கி; அதிர்ச்சியில் ஊழியர்கள்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (14:01 IST)
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


 

 
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் எஸ்பிஐ சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வங்கிகளும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த துவகியுள்ள நிலையில் ஐடி நிறுவனங்களை போல் எஸ்பிஐ வங்கியும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
 
2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனை விஆர்எஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் என கணக்கு காட்டியுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ நிர்வாகத் தலைவர் ராஜ்னிஷ் குமார் கூறியதாவது:-
 
அடுத்த சில வருடங்களில் வங்கித் துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறையும். எஸ்பிஐ வங்கியில் மட்டும் அடுத்த 2 வருடத்தில் 10% வேலைவாய்ப்புகள் குறைக்கப்படலாம் என்றார். 
 
வங்கிகளில் உள்ள முக்கியமான வேலைகள் அனைத்து ஆட்டோமேஷன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கியை விட தனியார் துறை வங்கிகள்தான் அதிகளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தனியார் துறை வங்கிகளில் பணி நீக்கத்தின் அளவு அதிகமாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்