பல வருட வாடகை பாக்கி - ரஜினிக்கு சொந்தமான பள்ளி இழுத்து மூடல்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (13:54 IST)
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ஆஸ்ரம் பள்ளி, பல வருடங்களாக வாடகை பாக்கி வைத்திருந்ததால், கட்டிட உரிமையாளர் அதை இழுத்து மூடியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில்  ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரமம் பள்ளி ஒன்று பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நிர்வகித்து வருகிறார். இந்த பள்ளிக்கு பல வருடங்களாக பல கோடி ரூபாய் வாடகை கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, இக்கட்டிடத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 


 

 
இந்நிலையில், இன்று காலை, பள்ளியை அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என கட்டிட உரிமையாளர் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து, அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின் அந்த மாணவர்கள் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த விவகாரத்தால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிகிறது. 
அடுத்த கட்டுரையில்