ரிவ்யூ கேட்காமல் வெளியேறிய கோலி… ரசிகர்கள் சோகம்!

vinoth
சனி, 21 செப்டம்பர் 2024 (07:54 IST)
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் நேற்று மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 86 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய வங்கதேச அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆட இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்த இன்னிங்ஸில் கோலி 17 ரன்கள் சேர்த்திருந்த போது LBW முறையில் ஆட்டமிழந்தார். அவர் தன்னுடைய அவுட்டுக்கு ரிவ்யூ கேட்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனால் ரிப்ளேவில் அவர் அடித்த பந்து பேட்டில் பட்டபிறகுதான் பேடில் பட்டதாக தெரியவந்தது. இதைப் பார்த்து அணி வீரர்கள், கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகிய அனைவரும் அதிருப்தி அடைந்தனர். ரசிகர்களும் தங்கள் சோகத்தை சமூகவலைதளங்கள் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்