டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

vinoth

வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (11:58 IST)
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி 376 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த இன்னிங்ஸில் அவர் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் ஆடிய தனது பத்து இன்னிங்ஸ்களில் 750 ரன்கள் சேர்த்துள்ளார். எந்தவொரு வீரரும் தனது சொந்த மண்ணில் முதல் பத்து இன்னிங்ஸ்களில் இத்தனை ரன்கள் சேர்த்ததில்லை.

ஜெய்ஸ்வாலுக்கு முன்னர் 1935 ஆம் ஆண்டு 1935 ஆம் ஆண்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜார்ஜ் ஹெட்டிங்லே தனது சொந்த மண்ணில் 10 இன்னிங்ஸ்களில் 747 ரன்கள் சேர்த்திருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்