முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்ப அஸ்வினும் ஜடேஜாவும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 7 ஆவது விக்கெட்டுக்கு 226 ரன்கள் சேர்த்தது குறித்து கம்பீர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள கம்பீர் நீண்ட நாட்களாக நம் அணியில் கபில்தேவ் போல வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் இல்லை என நாம் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்வின், அக்ஸர் மற்றும் ஜடேஜா போல சுழல்பந்து ஆல்ரவுண்டர்கள் வேறு எந்த அணியிலும் இல்லை. இதனை ஏன் யாரும் பெரிதாகப் பார்க்கவில்லை என தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.