பகல்-இரவு டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து- இங்கிலாந்து நாளை பலபரீட்சை

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (17:10 IST)
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நாளை நடைபெறவுள்ள பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

 
 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் மோதவுள்ள பகல்-இரவு டெஸ்ட் தொடர் நாளை ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது.
 
ஏற்கனவே பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து ஒரு போட்டியிலும், இங்கிலாந்து இரண்டு போட்டியிலும் விளையாடி உள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள 8 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்