நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி- தொடரை வென்றது இங்கிலாந்து

சனி, 10 மார்ச் 2018 (16:20 IST)
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரையும் வென்றது.
 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற்றிருந்தது.
 
இந்நிலையில், இன்று கிற்ஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து 49.5 ஓவரில் 223 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகப்பட்சமாக சானட்னர் 67 ரன்களும்,நிக்கோலஸ் 55 ரன்களும் எடுத்தனர்.
 
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.4 ஒவரில் 229 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகப்பட்சமாக பேர் ஸ்டோவ் 104 ரன்களும், ஹால்ஸ் 61 ரன்களும் எடுத்தனர்.
 
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்