முட்டாள்தனமான ஷாட்.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!

vinoth
சனி, 28 டிசம்பர் 2024 (08:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி சதமடித்தார். இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணி நேற்று இரண்டாம் நாள் முடிவில் 164 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்திருந்தது. இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் 82 ரன்களும் கோலி 36 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்திருந்தனர். அதையடுத்து இன்று போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தேவையற்ற ஸ்கூப் ஷாட் ஒன்றை ஆடி தனது விக்கெட்டை இழந்தார்.

இதுபற்றி பேசியுள்ள வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர் “முட்டாள் தனமானது.  இது ஒன்றும் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை ஆடுவது கிடையாது. இது முட்டாளதனமான ஷாட். இந்த ஷாட்டை ஆடிவிட்டு நீங்கள் ட்ரஸ்ஸிங் ரூமுக்கு செல்லக் கூடாது” என கடுமையாக சாடியுள்ளார். தற்போது இந்திய அணி 284 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்