அதையடுத்து ஆடிவரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் நாள் ஆட்டத்தில் கோலி மற்றும் ஆஸி அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் களத்தில் நடந்தது. அதனால் கோலிக்கு ஐசிசி 20 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில் இன்று கோலி 36 ரன்களில் அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறி பெவிலியன் நோக்கி சென்ற போது ஆஸி ரசிகர்கள் அவரைக் கிண்டல் செய்யும் விதமாகக் கூச்சலிட்டனர். இதனால் திரும்பி வந்த கோலி ரசிகர்களை நோக்கி முறைத்துப் பார்த்தார். பின்னர் அவரைப் பொறுப்பாளர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர். ஆஸி ஊடகங்களும் கோலியைக் கோமாளி போல சித்தரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.