ரோஹித்துக்குப் பிறகு ஸ்ரேயாஸ்தான் கேப்டனாக வரவேண்டும்… ஆப்கன் வீரர் கருத்து!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:48 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து  அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இப்போது பல மாத ஓய்வுக்குப் பிறகு அவர் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் எதிர்கால இந்திய அணிக்கு கேப்டனாக வரவேண்டும் என ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் கேப்டனாக செயல்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குர்பாஸ் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கடி காயமடைவது அவருக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்