ஐபிஎல் தொடர் முடிந்துவிட்டால் அதை மறந்துவிடுங்கள்… ரசிகர்களுக்கு அஸ்வின் கோரிக்கை!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:23 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் அதை 3-2  என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தொடர் தோல்வியின் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி ஒரு தொடரை இழந்தது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து விமர்சனங்கள் எழுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. இதுபற்றி இப்போது பேசியுள்ள மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய சேனலில் பேசியுள்ளார்.

அதில் “ஐபிஎல் தொடர் முடிந்ததும் அதை மறந்துவிடுங்கள். உலகக் கோப்பையில் விளையாடுபவர்களை இந்தியாவின் பிரதிநிதியாக பாருங்கள். உங்களுக்கு பிடித்த வீரர்கள் அணியில் இல்லை என்பதற்காக மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்