ஷுப்மன் கில்லுக்கு முத்த எமோஜியை பரிசாக அளித்த சாரா டெண்டுல்கர்!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (09:23 IST)
சச்சின் அஞ்சலி தம்பதிகளின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் லண்டனில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் மாடலாகவும் பணியாற்றி வருகிறார். பல பொருட்களின் விளம்பர தூதுவராக இருந்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் ஒரு மாடல் போல தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதற்கிடையில் சாராவும் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில்லும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதை இருவரும் இதுவரை மறுக்கவில்லை. இந்நிலையில் இப்போது கில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதை அவரை வாழ்த்தும் விதமாக எக்ஸ் தளத்தில் கில்லின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சாரா.

அது மட்டுமில்லாமல் அந்த பதிவில் “உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன்” எனக் கூறி முத்த எமோஜியையும் இட்டுள்ளார். இதன் மூலம் இருவரின் காதலும் உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்