சச்சின் வார்த்தைகள் உதவியது- முதல் சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி

செவ்வாய், 7 நவம்பர் 2023 (18:55 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.  இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி,  ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது.
 

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடினர்.. அந்த அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்  இப்ராஹிம் 129 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் திறமையான பேட்டிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பை கிர்க்கெட் வரலாற்றில் முதல் சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் என்ற வீரர் என்ற பெருமையை  இப்ராஹிம் ஜத்ரான் பெற்றுள்ளார்.

மேலும், ‘’ நேற்று சச்சின் டெண்டுல்கரை சந்தித்தேன். அவருடைய வார்த்தைகள் எனக்க்கு பெரிதும் உதவியயது. அவர் 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். அந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்’’ என்று சதம் விளாசிய பின்னர் இப்ராஹிம் ஜத்ரான் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்