இதையடுத்து ஆடிய பெங்களூரு அணி இலக்கை எளிதாக எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த போட்டியில் விராட் கோலி தேவ்தத் படிக்கல் அடித்த ஒரு பந்துக்கு ஓடியே நான்கு ரன்கள் சேர்த்தார். 36 வயதில் ஒரு இளம் வீரருக்கு நிகராக கோலி நான்கு ரன்கள் சேர்த்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு போட்டியில் கோலி ரன் ஓடும்போது மூச்சுவாங்கி, அருகில் இருந்த சஞ்சு சாம்சனை தன்னுடைய இதயத்துடிப்பை சோதிக்க சொன்னார். அது சம்மந்தமானக் காட்சிகள் வெளியான போது கோலிக்கு வயசாகிவிட்டது என்றெல்லாம் ரசிகர்கள் பரிதாபப்பட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செயலின் மூலம் கோலி தான் இன்னும் அதே இளமையோடும் உத்வேகத்தோடும் இருப்பதாகப் பதிலளித்துள்ளார்.