சென்னை அணியின் ப்ளே ஆஃப் கனவுக்கு அச்சுறுத்தல் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!

vinoth

திங்கள், 21 ஏப்ரல் 2025 (08:35 IST)
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை மோதின.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதான வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் மட்டும் சேர்த்தது.  அந்த அணியின் ஜடேஜா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. அந்த அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

ரோஹித் ஷர்மா இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கி ஆட்டநாயகன விருதைத் தட்டிச் சென்றார். இது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆறாவது தோல்வியாகும். இதன் மூலம் சி எஸ் கே ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்