இன்று ஆஸ்திரேலியாவோடு மோதல்… ஆப்கன் வீரர்களை சந்தித்து அறிவுரை வழங்கிய சச்சின்!

செவ்வாய், 7 நவம்பர் 2023 (10:54 IST)
ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு போட்டியிடும் அணிகளுள் ஒன்றாக இருப்பதால் இந்த போட்டி ஆப்கானிஸ்தானுக்கும் மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கன் அணி இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வெற்றி பெற்று  8 புள்ளிகளோடு உள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் இன்று ஆஸி அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஆப்கன் அணியின் ஆலோசகர் அஜய் ஜடேஜா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்து ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு தனித்தனியாக ஆலோசனை வழங்க வைத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்