மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

vinoth
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (15:17 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க ஜோடியான கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது போட்டியிலும் அதே நிலையில் ஆடினர். கேப்டன் ரோஹித் ஷர்மா ஆறாவது வீரராக இறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பிரிஸ்பேனில் நடக்கும் அடுத்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஹர்ஷித் ராணா மற்றும் அஸ்வின் ஆகியோர் நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்