ரோஹித் ஷர்மாவுக்கு பயிற்சியில் காயம்… இந்திய அணிக்கு பின்னடைவு!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:30 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலைப் பயிற்சியின் போது காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி அரையிறுதி போட்டிக்காக தயாராகி வரும் நிலையில அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலைப் பயிற்சியில் ஈடுபட்ட போது அவர் காயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக இந்த தொடர் முழுவதும் ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இந்த தொடரில் இன்னும் அவர் 100 ரன்களை கூட சேர்க்கவில்லை. அதுபோல களத்திலும் வீரர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்