பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

Siva

ஞாயிறு, 4 மே 2025 (19:32 IST)
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் இதில் இரண்டாவது போட்டி பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே இன்னும் சில நிமிடங்களில் தொடங்க இருக்கிறது.
 
இந்த போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை, தற்போது 13 புள்ளிகள் பெற்றுள்ளதால், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், மும்பை மற்றும் குஜராத் அணிகளை பின்னுக்கு தள்ளி விட்டு இரண்டாவது இடத்தை பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
லக்னோ அணிக்கு இன்றைய போட்டி “வாழ்வா – சாவா” என்ற நிலைக்கு உள்ளது. இன்று வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை லக்னோ அணி தக்க வைத்துக் கொள்ளும்.
 
இந்த நிலையில், பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளில் ஆடும் லெவனில் உள்ளவர்கள் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
 
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ரிஷப்த் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரன், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஆகாஷ் சிங், ஆவேஷ் கான், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி
 
லக்னோ அணியில் பெஞ்ச்சில் இருப்பவரக்ள்: ரவி பிஷ்னோய், மிட்சல் மார்ஷ், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமத், மெத்யூ பிரீட்ஸ்கே
 
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்ஸிம்ரன் சிங், பிரியாஞ்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஜாஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், நெஹால் வாதேரா, மார்கஸ் ஸ்டாயினிஸ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷதீப் சிங்
 
பஞ்சாப் அணியில் பெஞ்ச்சில் இருப்பவர்கள் : விஜய்குமார் வைஷாக், ஹர்ப்ரீத் பிரார், பிரவீன் துபே, சூரியாஷ் ஷெட்ஜே, ஜேவியர் பார்ட்லெட்

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்