ரோகித்துக்கு காயம்: ஆடும் 11-ல் இடம் பெறுவாரா??

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:10 IST)
வலை பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு காயம் என தகவல்.

 
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டி 20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முன்கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல். இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது எஸ் ரகுவிடமிருந்து வழக்கமான த்ரோ டவுன்களை ரோஹித் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு ஷாட் பந்து எதிர்பாராத விதமாக அவரது வலது முன்கையில் பட்டு ரோகித் வலியால் துடித்தார். உடனடியாக வலைகளை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவரது வலது கையில் ஒரு பெரிய ஐஸ் பேக் கட்டப்பட்டது. மென்டல் கண்டிஷனிங் பயிற்சியாளர் பேடி அப்டன் கணிசமான நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா பின்னர் தனது பயிற்சியை தொடங்கினார். இதனால் அவருக்கு ஏற்பட்ட காயம் அரையிறுதி போட்டியில் விளையாட பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

ஆட்டத்திற்கு இன்னும் 48 மணிநேரம் உள்ள இந்த கட்டத்தில், எலும்பு முறிவு ஏற்பட்டால் தவிர அவரை விளையாடும் லெவன் அணியில் இருந்து வெளியேற்றும் வாய்ப்பு இல்லை. இந்திய மருத்துவக் குழு அவர் உடல்நிலையை ஆராயும்.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்