முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

Siva

திங்கள், 5 மே 2025 (19:30 IST)
ஐபிஎல் தொடரில் இன்று ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பதும் ஐதராபாத் வென்றால் ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் ஐதராபாத் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
டெல்லி அணி தற்போது 12 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் அதே இடத்தில் தான் இருக்கும் என்றும், ஆனால் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் குஜராத்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐதராபாத் அணியை பொறுத்தவரை 6 புள்ளிகள் மட்டுமே எடுத்து ஒன்பதாவது இடத்தில் உள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் அந்த  அணி எட்டாவது இடத்திற்கு செல்லுமே தவிர அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இல்லை.
 
இந்த நிலையில் இரு அணிகளின் ஆடும் 11 வீரர்கள் பற்றிய தகவல் இதோ.
 
ஐதராபாத்:” அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சச்சின் பெபி, ஹைனிரிக் கிளாஸன், அனிகேத் வெர்மா, அபிநவ் மனோஹர், பட்ட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜீஷான் அன்பாரி, ஈஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனாத்கத்
 
 பெஞ்ச்: டிராவிஸ் ஹெடு, முகமது ஷாமி, ஹர்ஷ் துபே, ராகுல் சஹர், வியான் முல்டர்
 
டெல்லி : அபிஷேக் பொரேல், பாஃப் டு பிளெஸி, கருண் நாயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஆக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிச்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சாமீரா, குல்தீப் யாதவ், டி.நடராஜன்
 
பெஞ்ச்: அஷுதோஷ் ஷர்மா, மோகித் ஷர்மா, ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க், சமீர் ரிஸ்‌வி, முகேஷ் குமார்

இந்த நிலையில் டெல்லி அணியின் கருண் நாயர் முதல் பந்திலேயே அவுட்டானார். பேட் கம்மின்ஸ் பந்தில் அவர் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்